புதுடில்லி:நாடு முழுவதும், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி
அமலுக்கு வந்தால், கட்டப்பட்டு வரும் நிலையில் உள்ள அடுக்குமாடி
குடியிருப்புகளுக்கான வரி உயரும் என, தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம்,
அந்த குடியிருப்புகளின் விலை உயரக்கூடும் என தெரிகிறது.
இதை மாற்றி, நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை கொண்டு வரும் வகையில், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தி யது. ஏற்கனவே, லோக்சபாவில் நிறைவேற்றப் பட்ட இந்த மசோதா, நீண்ட இழுபறிக்கு பின், ராஜ்யசபாவிலும், சமீபத்தில் நிறைவேற்றப் பட்டது.
பல்வேறு நடைமுறைகளுக்கு பின், இம் மசோதா, அடுத்த ஆண்டு, ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப் படுகிறது. அப்படி அமலுக்கு வந்தால், சில பொருட்களை தவிர, அனைத்து பொருட்கள் மற்றும் சேவை களுக்கு, 18 சதவீத வரி விதிக்கப்படலாம் என தெரிகிறது. இதனால், சில பொருட்களின் விலை உயரும்; சில பொருட்களின் விலை குறையும் நிலை உள்ளது.
ஜி.எஸ்.டி., வரி அமலுக்கு வந்தால், அதன் எதிரொலி கட்டுமானத் துறையிலும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி வீடுகளுக்கு, புதிய வரி விதிப்பால் மாற்றம் ஏதும் இருக்காது. அதேசமயம், அடுக்கு மாடி குடியிருப்பு முன்பதிவு செய்து, கட்டப்பட்டு வருமேயானால், ஜி.எஸ்.டி.,யின் கீழ் வரி விதிக்கப்படும்.
இதனால், அதன் விலை, 5 சதவீதம் முதல், 10 சதவீதம் வரை உயரக்கூடும் என தெரிகிறது.ஒருவர் தற்போது, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு ஒன்றை வாங்க பத்திர பதிவு முடிந்து, கட்டுமான பணிகள் நடந்து வந்தால், அது, பணிக்கான ஒப்பந்தமாக மட்டுமே கருதப்படுகிறது.
கட்டுமான பணிகளுக்கான சேவை வரி மட்டும் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, நிலம் தவிர கட்டுமான பணிகளுக்கான, 40 சதவீத தொகைக்கு மட்டும், 15 சதவீதம், சேவை வரி விதிக்கப்படுகிறது. இல்லையென்றால் ,ஒட்டுமொத்த தொகைக்கு கணிக்கிட்டு, 6 சதவீத சேவை வரி வசூலிக்கப்படுகிறது.
அதேசமயம், ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டால், வீட்டின் ஒட்டுமொத்த தொகையும், சேவையின் கீழ் வரும். அதன்படி, வீட்டின் ஒட்டுமொத்த தொகைக்கும், ஜி.எஸ்.டி., வரி வசூலிக்கப்படும். இதன் மூலம், கட்டுமானம் நடந்து வரும் வீடுகளின் விலை உயரக்கூடும் என ரியல் எஸ்டேட்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து வரி ஆலோசனையாளர்கள் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., வடிவமைப்பின் படி, நிலத்திற்கான பத்திரப்பதிவு மற்றும் கட்டுமான ஒப்பந்தம் ஆகிய இரண்டையும், தற்போது இருப்பதுபோல பிரித்து பார்க்க முடியாது. இவை ஒட்டுமொத்த சேவையாக பார்க்கப்படும். ஜி.எஸ்.டி., வரி 12 சதவீதம் என்றால், புதிய வீட்டுக்கான மொத்த வரி, 6 சதவீதமாக இருக்கும். அதுவே, ஜி.எஸ்.டி., வரியின் அளவு, 18 சதவீதமாக இருந்தால், புதிய வீட்டுக்கான மொத்த வரி, 12 சதவீதமாக உயர்ந்து விடும்.இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
ஜி.எஸ்.டி.,க்கு முன்பு...
* மொத்த சேவை வரி 6 சதவீதம்
* மாநில அரசின் வாட்: 0 - 1 சதவீதம்
ஜி.எஸ்.டி.,க்கு பிறகு...
* கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி வீடுகளுக்கு வரியில் மாற்றம் இல்லை
* கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு, ஜி.எஸ்.டி., வரும் வரை பழைய வரி; வந்த பின் மீதமுள்ள தொகைக்கு மட்டும் புதிய வரி
* ஜி.எஸ்.டி., வந்த பின் வீடுமுன்பதிவு செய்தால், மொத்த தொகைக்கும், ஜி.எஸ்.டி., வரியை பொறுத்து, வரி விதிப்பு இருக்கும்.
பத்திர பதிவு கட்டணம் உண்டு:
நிலத்தை பத்திர பதிவு செய்யும்போது, தற்போது இருப்பதை போல, பதிவு கட்டணம் தனியாக செலுத்த வேண்டும். இது மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது; 5 முதல் 8 சதவீதம் வரை விதிக்கப்படுகிறது. இது, ஜி.எஸ்.டி., வரியின் கீழ் வராது. மாநில அரசு விதிக்கும் இந்த முத்திரை தாள் கட்டணத்தையும், வீடு வாங்குவோர் செலுத்தியாக வேண்டும். ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தால், அடுக்குமாடி குடி யிருப்பு வீடுகளின் விலை 5 முதல் 10 சதவீதம் வரை உயரக்கூடும்
* கட்டி முடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு, ஜி.எஸ்.டி., பொருந்தாது. இதனால், அந்த வீடுகளின் விலை உயர வாய்ப்பில்லை
* வீட்டிற்காக ஏற்கனவே பணம் செலுத்தி இருந்தால், ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த பின்னர், செலுத்த வேண்டிய மீதித் தொகைக்கு மட்டும், வரி விதிக்கப்படும்.
அடுத்து என்ன?:
பார்லிமென்டில் இந்த மசோதா நிறைவேறி யதைத் தொடர்ந்து, அனைத்து மாநில சட்ட சபைகளுக்கும், இந்த மசோதா ஒப்புதலுக்காக அனுப்பப்படும். 50 சதவீத மாநிலங்கள் ஒப்புதல் அளித்த பின், ஜனாதிபதியின் ஒப்புதலுடன் சட்டமாக்கப்படும்.
மத்திய, மாநில அரசுகள் அடங்கிய, ஜி.எஸ்.டி., கவுன்சில் அமைக்கப் பட்டு, சட்ட விதிகள் உருவாக்கப்படும். 2017, ஏப்ரல், 1ம் தேதி முதல் இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முத்திரை தாள் கட்டணம் வசூலிக்கப் படுவ தால், கட்டுமானத் துறையை, வழக்கமான, ஜி.எஸ்.டி., பிரிவின் கீழ் கணக்கிடக் கூடாது; இதனை தனியாக தான் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது உள்ள நடைமுறைப்படி, நில கட்டுமானம் உள்ளிட்டவற்றிக்கு விலக்கு அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், வீடுகளின் விலை உயராது.
கீதாம்பர் ஆனந்த் தலைவர், இந்திய ரியல் எஸ்டேட் தொழில் சங்க கூட்டமைப்பு
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.