Pages

Tuesday, 17 February 2015

பிப்ரவரி மாத கூட்ட அறிக்கை




Sri Seshadri Brindavan Apartment Owners Association

Ist Cross Street, Sekar Nagar, New Perungalathur, 
CHENNAI – 600 063.
Blog:ssbaoasn.blogspot.in                      Email:ssbaoa2015@gmail.com

பிப்ரவரி மாத கூட்ட தீர்மான விபரம்:

       நமது சங்கத்தின் பிப்ரவரி மாத கூட்டம் 15-02-2015 அன்று நடைபெற்றது. அவ்வமயம் கீழ்க்காணும் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு விவாதித்த பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தீர்மானம் 1:
சங்கத்தின் உறுப்பினர் கட்டணமாக ரூ 1000 (ரூபாய் ஆயிரம் மட்டும்) வசூலிப்பது எனவும் இத்தொகையினை இம்மாதம் 20ம் தேதிக்குள் வசூலிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 2:
மாதாந்திர பராமரிப்புத்தொகையாக ரூ 300 (ரூபாய் முன்னூறு மட்டும்) மார்ச் மாதம் முதல் வசூலிப்பது என தீர்மானிக்கப்பட்டது. இதில் கூட்டுபவர்க்கான ஊதியம் ரூ 200 (ரூபாய் இருநூறு மட்டும்) அளித்துவிட்டு மீதத்தொகை ரூ 100 (ரூபாய் நூறு மட்டும்) அவசரத்தேவைகட்காக வைத்திருந்து தேவைக்கேற்ப பயன்படுத்தலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 10 ம் தேதிக்குள் பராமரிப்புத்தொகையினை பொருளாளரிடம் அளித்திடவேண்டும் எனவும். இதற்காக ஒவ்வொரு பிளாக்கிலும் ஒருவர் பொறுப்பேற்று தொகையினை வசூல் செய்து அளிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தீர்மானம் 3:
சங்கத்தின் பெயரில் State Bank of Hydrabad ல் ஒரு சேமிப்புக்கணக்கு துவங்கி கணக்கினை செயலாளர் மற்றும் பொருளாளர் சேர்ந்து வங்கியில் பணம் பெறும் அதிகாரம் வழங்கலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 4:
சங்கத்திற்கான லெட்டர் பேட் தயாரிக்கவும், சேகர் நகர் முகப்பிலிருந்து நமது அபார்ட்மெண்டிற்கு வரும் வழியில் ஓரிரு இடங்களில் : “Way to ஸ்ரீ சேஷாத்ரி பிருந்தாவன்” என பெயர் பலகை வைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

சங்கத்தின் அடுத்த கூட்டம் 08-03-2015 அன்று மாலை 4 மணி அளவில் நடத்தப்படும்.

President:
Dr. R.Venkatesan, P.hd.,
Cell:9444703070
Secretary:
S.Haran Duraisamy,
Cell:9444307160
Treasurer:
A.Kumaranprabu
Cell:9840876045

Saturday, 7 February 2015

பிப்ரவரி மாத கூட்ட தேதி மாற்றம் அறிவிப்பு

நாளை 08-02-2015 அன்று மாலை நடைபெற இருந்த நமது சங்க கூட்டம் தவிர்க்க இயலாத காரணங்களிலால் ரத்து செய்யப்படுகிறது. கூட்டம் அடுத்த ஞாயிறு 15-02-2015 அன்று மாலை 04-30 மணி அளவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Wednesday, 4 February 2015

பிப்ரவரி மாத கூட்டம்

நமது சங்கத்தின் பிப்ரவரி மாத கூட்டம் 08-02-2015 அன்று மாலை 4.30 மணி அளவில் நடைபெற உள்ளது. அவ்வமயம் ஒரு சில முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளதால் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சங்க நிர்வாகிகள் தேர்வு

04-01-2015 அன்று நமது சங்க கூட்டம் நடைபெற்றது. நமது வளாகத்தில் உள்ள பிரச்சனைகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

முதற் கட்டமாக சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர்:       திரு ஆர். வெங்கடேசன் 
                           (சி பிளாக் - எஸ்1)

செயலாளர் : திரு ஹரன் துரைசாமி 
                           (பி பிளாக் - ஜி1)

பொருளாளர்:  திரு அ.குமரன் பிரபு 
                             ( எ பிளாக்- எப் 1)



திரு கே.கோபாலகிருஷ்ணன் (சி-பிளாக்-எப்2), திரு என்.ராமலிங்கம் (டி பிளாக்  - எப்) மற்றும் திரு ச.அன்புகணேசன் (எ பிளாக் - எப் 1) ஆகியோர் சங்க ஆலோசகர்களாக தங்களது மேலான ஆலோசனைகளை அளித்து இச்சங்கம் சிறப்புடன் செவ்வனே பணியாற்ற  உதவி புரியுமாறு  கேட்டுக் கொள்ளப் பட்டனர்.